Advertisements

விசாகப்பட்டினத்தில் இருந்து திருச்சிக்கு கடத்தி வந்த 21கிலோ கஞ்சாவை, திருவெறும்பூர் மது அமுலாக்க பிரிவு DSP ஜெயசீலன் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்தனர்.
திருச்சி ராம்ஜிநகர் பகுதியை தலைமையிடமாக கொண்டு கஞ்சா விற்பனை நடைபெறுவதை கட்டுப்படுத்தும் வகையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு கண்காணித்து வந்தனர். அந்த வகையில் திருச்சி ராம்ஜிநகரை சேர்ந்த முருகன் என்பவர் வட மாநிலங்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்து விற்பனையில் ஈடுபட்டது திருவெறும்பூர் மது அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் ரகசியமாக முருகனைக் கண்காணித்த போது முருகன் தன்னுடைய மகன் சக்திவேல் மற்றும் பட்டுக்கோட்டை அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த அப்துல் பாசித் ஆகிய இருவரையும் விசாகப்பட்டினம் அருகே உள்ள ராயகடா பகுதியில் கஞ்சா பார்சலை வாங்கி வர அனுப்பி வைத்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து சக்திவேல் மற்றும் அப்துல் பாசித் ஆகிய இருவரையும் போலீசார் கண்காணித்து வந்தனர்.அப்போது அவர்கள் இருவரும் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு ரயில் மூலமாக பயணிகள் போல் இரண்டு பேக் மற்றும் ஒரு சூட்கேஸில் கஞ்சா பார்சலை பதுக்கி வைத்து கடத்தி வந்துள்ளதையும், அவர்கள் இருவரும் அரசு பேருந்தில் பயணிகள் அமர்ந்து திருச்சிக்கு கஞ்சா பார்சலுடன் வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து திருவெறும்பூர் மது அமலாக்க பிரிவு டிஎஸ்பி ஜெயசீலன் தலைமையிலான
போலீசார் சமயபுரம் டோல்பிளாசாவில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அரசு பேருந்தில் சக்திவேல் மற்றும் அப்துல் பாசித் இருவரும் கஞ்சா பார்சலுடன் கையும் களவுமாக பிடிபட்டனர்.
பின்னர் இருவரையும் பிடித்து விசாரித்த போது இதற்கு முருகன் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து முருகன், சக்திவேல், அப்துல் பாசித் ஆகிய மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 21 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Advertisements
