
செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் அருகே சாலை பணிகளை தடுத்து நிறுத்தி அராஜகத்தில் ஈடுபடும் திமுக ஒன்றிய கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சித்தாமூர் ஒன்றியத்துக்குட்பட்ட முகுந்தகிரி ஊராட்சியில் MGNRGS மற்றும் WMM திட்டத்தின் கீழ் இரு வேறு பகுதிகளுக்கு சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இப்பணியை அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி சண்முகம் என்பவர் சாலை அமைக்கும் பணியினை மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் நாகப்பன் என்பவர் தனது அடியாட்களுடன் சாலை பணிகள் மேற்கொள்ளும் பகுதியில் நேரில் சென்று அராஜகத்தில் ஈடுபட்டு சாலை பணியை தடுத்து நிறுத்தி உள்ளார்.
இதனை அறிந்து அப்பகுதி கிராம பொதுமக்கள் ஒன்றிய கவுன் சிலரிடம் பணியை ஏன் தடுத்து நிறுத்தினீர்கள் என்று கேட்டதற்கு இது எங்கள் திமுக ஆட்சி ஆட்சியாளர்கள் மட்டுமே பணியை மேற்கொள்வோம் என பொதுமக்களிடம் அடாவடியில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் அப்பகுதி பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சித்தாமூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மாவட்ட நிர்வாகம் துறை சார்ந்த அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி சண்முகத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கி சாலை திட்ட பணிகளை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
