கண்களில் ரத்தம் வடிய வைத்து கொல்லும் வைரஸ்!

Advertisements

“முதல் நாள் காய்ச்சல், 5 ஆம் நாள் கண்கள் வழியே ரத்தம் வடிதல், 8 அல்லது 9 நாட்களில் மரணம்”

Advertisements

ருவாண்டாவில் 15 பேரின் உயிரைப் பறித்த ரத்தக் கசிவு காய்ச்சல்

தொற்று ஏற்பட்ட 8 முதல் 9 நாட்களுக்குள் கண்களில் ரத்தம் வடிய வைத்து உயிரைப் பறிக்கும் ரத்த கசிவு காய்ச்சல், உலக நாடுகளுக்குப் புது அச்சுறுத்தலாக மாறி உள்ளது. உலகின் மோசமான நோய் என வகைப்படுத்தப்பட்டுள்ள ரத்தக் கசிவு வைரஸ் என்றால் என்ன, அது எப்படி பரவுகிறது.

முதல் நாள் காய்ச்சல், 5 ஆம் நாள் கண்கள், வாய் உள்ளிட்டவை வழியே ரத்தம் வடிதல், 8 அல்லது 9 நாட்களில் மரணம்…

இப்படிதான், கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ருவாண்டாவில் 15 பேரின் உயிரைப் பறித்துள்ளது ரத்தக் கசிவு காய்ச்சல்.

அந்நாட்டில், 100க்கும் மேற்பட்டோர் ரத்த கசிவு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 மாதங்களில் ருவாண்டா, காங்கோ, கென்யா, உகாண்டா உள்ளிட்ட 17 ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பரவி உள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் இந்த நாடுகளுக்குச் சென்று வருவோர் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்த நோய், உலக சுகாதார அமைப்பால் மார்பர்க் (Marburg) வைரஸ் பாதிப்பு என்று அழைக்கப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கையின் படி, ரத்த கசிவு வைரஸ் தொற்றின் அறிகுறிகள் தெரிய 2 முதல் 21 நாட்கள்வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது. முதலில் கடுமையான காய்ச்சல், தலைவலியுடன் அறிகுறிகள் தோன்றும். இரண்டாவது நாளில் தசை மற்றும் உடல் வலிகள் ஏற்படும்.வயிற்று வலி, தசைப்பிடிப்பு, குமட்டல், வாந்தி, அரிப்பு, உள்ளிட்ட அறிகுறிகள் மூன்றாம் நாளில் தொடங்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

5 ஆம் நாளில், வாந்தி, மலத்தில் ரத்தப்போக்கு ஏற்படும். அதன் தொடர்ச்சியாக ரத்த நாளங்களைச் சேதப்படுத்தி, கண்கள் உள்பட உடல் துவாரங்கள் வழியாக ரத்தத்தை வெளியேற்றும். அதாவது, மூக்கு, கண்கள், காதுகள், வாய், பிறப்பு உறுப்புகள் வழியே ரத்தம் கசியத் தொடங்கும்.

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக உடலில் உள்ள ரத்தத்தை வெளியேற்றி, உடலை முற்றிலும் செயலிழக்க செய்யும் ரத்தக் கசிவு வைரஸ், அறிகுறிகள் தோன்றிய 8 அல்லது 9 நாட்களுக்குள் உயிரைப் பறித்துவிடும் என்று கூறுகிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

பொதுவாக ரத்தக் கசிவு வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களைத் தொடுவதன் மூலமும் அவர்கள் பயன்படுத்திய படுக்கைகள், ஆடைகள் மூலமும் இந்த வைரஸ் காய்ச்சல் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

இதனால், ரத்தக் கசிவு வைரஸ் நோயின் அறிகுறிகளுள்ள நபருக்குச் சிகிச்சை அளிக்கும் சுகாதார பணியாளர்கள் அதிகளவில் இந்த நோய் பரவலுக்கு உள்ளாவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தக் கொடூர ஆட்கொல்லி வைரஸ் பாதிப்புக்குத் தடுப்பூசிகள் மற்றும் தனியே சிசிச்சை முறைகள் கண்டறியப்படவில்லை. காய்ச்சலுக்கு தரும் ஆரம்ப கால சிகிச்சை முறை, ரத்தக்கசிவு வைரஸைத் தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தி வெளியேற்ற உதவும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *