S.Regupathy: ஆளுனர் மீது பரபரப்பு புகார்!

சென்னை: மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதாக கவர்னர் ஆர்.என்.ரவி மீது அமைச்சர் ரகுபதி புகார் அளித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:- உச்சநீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில், 10 மசோதாக்களை கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளார். 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் தராததால் 2-வது முறையாக சட்டசபையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம்.மசோதாக்களை திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை கூட கவர்னர் கூறவில்லை. துணை வேந்தரை நியமிக்கக்கூட மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கக்கூடாது என நினைப்பது எந்த வகையில் நியாயம்?

தன்னிடம் இருக்கும் அதிகாரம் பறிபோய் விடக்கூடாது என கவர்னர் நினைக்கிறார்.இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *