
உச்சநீதிமன்றத்தில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க கோரிஉண்ணாவிரதம் இருக்கும் வழக்கறிஞர்களுக்கு ஆதரவாகவிருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் முன்பு அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றத்தைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம், உள்ளிட்டஇந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்களில்அங்குள்ள இந்தி மொழி ஆட்சி மொழியாகவும்வழக்காடும் மொழியாகவும் இருக்கின்றபோது தமிழ் பேசுகிறதமிழகத்தில் மட்டும்ஆட்சி மொழியாக இல்லாதது ஏன் எனக் கேட்டுத் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக மத்திய அரசை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் 8 நாட்களாகஉண்ணாவிரதம் இருக்கும் வழக்கறிஞர்களை ஆதரித்து விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் முன்பு அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றத்தைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் தமிழைஅறிவித்திட மத்திய அரசை வலியுறுத்தியும், தற்போது உள்ள இந்தி மொழிஎதிர்வாதிகளுக்கும் நீதிபதிக்குமே புரியாத மொழியாக உள்ளதால்தமிழ் மொழியை ஆட்சி மொழியாக உடனடியாகத் தமிழக அரசும் மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முழக்கங்களிட்டுஆர்ப்பாட்டம் செய்தனர்.
வழக்கறிஞர்கள் சங்க தலைவர் காசி விசுவநாதன்தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் மோகன், மூத்த வழக்கறிஞர்கள் அம்பேத்கார், சந்திரசேகரன், முன்னிலையில் வழக்கறிஞர்கள் கணபதி, ஜெயபிரகாஷ், சதீஷ், சிவசங்கர், இனியவள், காயத்திரி, மற்றும் ஏராளமான இளம் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்


