C. V. Ganesan: 15 நாட்களில் மனுக்கள் மீது தீர்வு!

திட்டக்குடியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை அமைச்சர் சி.வெ கணேசன் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட வழிவகுக்கும் “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தைமுதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  கோயம்புத்தூரில் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் தனியார் மண்டபத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் முகமினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு சி. வெ. கணேசன் துவக்கி வைத்தார்.

மக்களுடன் முதல்வர் முகாமில் பொதுமக்கள் மற்றும் தொழில்முனைவோர் கலந்து திரளாக கலந்து கொண்டு புதிய மின்இணைப்பு, மின் வீதப்பட்டியல் மாற்றம், பெயர்மாற்றம், மின்பளு மாற்றம், குடிநீர்-கழிவுநீர் இணைப்புகள், சொத்துவரி பெயர்மாற்றம், பிறப்பு-இறப்பு சான்றிதழ், திடக்கழிவு மேலாண்மை, பட்டா மாறுதல், உட்பிரிவு நிலஅளவை, இலவச வீட்டு மனைப்பட்டா, வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்பட அரசு சார்ந்த சேவைகளுக்கு விண்ணப்பம் பெறப்பட்டது.

அவை இணையத்தளத்தில் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றனர், முகாமில் திமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *