78-வது சிறந்த நடிகராக அட்ரியன் பிராடி தேர்வு!

லண்டன்:

சர்வதேச அளவில் ஆஸ்கர் விருதுக்கு அடுத்ததாகக் கவுரமிக்க விருதாகக் கருதப்படும் பிரிட்டிஷ் அகாடமியின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி விருதுகள் (பாப்டா) ஆகும்.

இந்த நிலையில், 78-வது பாப்டா விருதுகள் வழங்கும் விழா லண்டனில் நடைபெற்றது.

இதில் சிறந்த நடிகராக அட்ரியன் பிராடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தி புரூடலிஸ்ட் படத்தில் நடித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது.

மேலும், இம்மாதம் நடைபெற்ற கோல்டன் குளோப் விருது மற்றும் கிரிட்டிக் சாய்ஸ் விருதுகளில் புரூடலிஸ்ட் படம் விருது பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *