கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நாம் தலைவர் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைத் தளப் பதிவில், கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும், தனது இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ‘அறம் பிறழ்கின்றபோது தான் இவ்வுலகில் அவதரிப்பேன்’ என்ற கண்ணபிரானின் போதனைக்கேற்ப, அறத்தை வளர்ப்பதே நமது கடமை என்ற உயரிய குறிக்கோளுடன் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
நாம் தலைவர் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைத்தளப் பதிவில், தமிழக மக்கள் அனைவருக்கும், பகவான் கிருஷ்ணரின் அவதாரத் திருநாளான கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். கிருஷ்ணரின் அருளால், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் நிறைந்திருக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

