Forgery: கள்ளச்சாராயம் விற்ற ஊராட்சி மன்ற தலைவி!

Advertisements

வீட்டில் வைத்துக் கள்ளச்சாராயம் விற்பனை செய்வத ஊராட்சி மன்ற தலைவி கைது செய்யப்பட்டார்.

வேப்பூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் சிறுபாக்கம் அடுத்த வடபாதி கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் கற்பகம் (27). இவரது கணவர் மணிவேல், கள்ளச்சாராயம் விற்றதாகக் கடந்த சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டு, தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஊராட்சி மன்ற தலைவி கற்பகம், தனது வீட்டில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாகச் சிறுபாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போலீசார் நேற்று ஊராட்சி தலைவி கற்பகம் வீட்டைச் சோதனை செய்தபோது, சாக்கு பையில் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரது வீட்டிலிருந்து 23 பாக்கெட்டுகளில் இருந்த 4.6 லிட்டர் கள்ள சாராயத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாகப் போலீசார் வழக்கு பதிந்து கற்பகத்தை கைது செய்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *