Vikravandi By Election: பாமக சார்பில் அன்புமணி போட்டி!

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாமக சார்பில் சி.அன்புமணி போட்டியிடுவார் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து இந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இடைத்தேர்தலுக்கான வேட்பாளரைத் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி அறிவித்து விட்டது. இந்நிலையில், இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா அல்லது பாமக போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து வந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் பாமக போட்டியிடும் எனப் பாஜக மாநிலதத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *