இதெல்லாம் எங்களுக்கு சின்ன விஷயம்.! ஈரானுக்கு எதிராக ரகசிய பேச்சுவார்தை.!

ஈரானுக்கும் – அமெரிக்காவுக்கும் இடையே நடக்கக்கூடிய இந்த போர் மோதலை உலகமே அஞ்சி பார்த்து கொண்டிருக்கும் நிலையில , அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் திடீர்னு ஒரு குண்டை தூக்கிப் போடுறாரு. “இதை போர்னுலாம் சொல்லவே முடியாது” அப்படின்னு அடித்துச் சொல்றாரு. ஓவல் அலுவலகத்துல நிருபர்கள் இதைப்பற்றி கேள்வி கேட்டப்போ, அதிபர் டொனால்டு ட்ரம்ப் களத்துல இறங்கி வான்ஸுக்க ஆதரவா பேசுறாரு.

ட்ரம்ப் என்ன சொல்றாருன்னா:

“அவர் சொல்றது கரெக்ட் தான். நான் இதை ஒரு ராணுவ மோதல்னுதான் அழைப்பேன். ஏன்னா, இது எங்களுக்கு ஒரு சின்ன விஷயம். வியட்நாம் போர் மாதிரியோ, ஆப்கானிஸ்தான் போர் மாதிரியோ இது பெரிய விஷயம் கிடையாது. நாங்க அப்பப்போ சில தாக்குதல்களைத் தொடுக்கிறோம். இதெல்லாம் ரொம்ப சின்ன விஷயம் பிரதர் அப்படின்ற மாதிரி அவரு சொல்றாரு..

ஆனா யோசிச்சு பாருங்க… 37.5 பில்லியன் டாலருக்கும் அதிகமான அமெரிக்க வரிப் பணம் செலவாகியிருக்கு. 18 ராணுவ வீரர்களின் உயிர் போயிருக்கு. ஆனா இதையெல்லாம் ட்ரம்ப் ரொம்ப கூலாக “சின்ன விஷயம்”னு கடந்து போறாரு. நவம்பர் மாத இடைக்காலத் தேர்தல் வேற பக்கத்துல வந்துட்டு இருக்கு.

குடியரசு கட்சியினர் தாங்கள் வசம் இருக்கிற மைக்ரோ மெஜாரிட்டியை (மிகக் குறைந்த பெரும்பான்மை) தக்கவைக்க போராடிட்டு இருக்கிற இந்த நேரத்துல, இந்த விவகாரத்தை பூதாகரமாக காட்ட விரும்பாமல், “இது தீவிரமான துப்பாக்கிச் சண்டையே இல்லை” அப்படின்னு வான்ஸ் ரொம்ப கவனமா வாக்குவாதங்களை தவிர்த்து வராங்க.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்து ட்ரம்ப் பேசிய பேச்சு உலக நாடுகளை மிரள வச்சதுன்னே சொல்லலாம்.. ஈரான் விவகாரத்துல அமெரிக்கா என்னென்ன பண்ணியிருக்குன்னு ட்ரம்ப் லிஸ்ட் போடுறாரு பாருங்க:

“நாங்க ஈரானோட அணு ஆயுதக் கனவை தகர்த்துட்டோம். ஈரானின் பிக்காக்ஸ் பகுதி அதாவது அந்த யுரேனியம் செறிவூட்டும் பகுதியில் ஏதாவது நடவடிக்கை இருந்தா, அடுத்த நொடியே குண்டு விழும். ஈரான் முழுவதையும் எங்கள் கட்டுப்பாட்டுல கண்காணிச்சுட்டு இருக்கோம்.

ஹார்மூஸ் நீரிணையில இருந்த ஈரானோட ரேடார், போர் விமானங்கள் எல்லாத்தையும் நாங்க அடிச்சு நொறுக்கிட்டோம். அங்க கிடந்த கண்ணிவெடிகளை எங்க கப்பல்கள் அகற்றி இப்போ அந்த ஜலசந்தி முழுசா எங்க கண்ட்ரோல்லதான் இருக்கு!”
அதுமட்டுமில்லாது, “நாங்கள் வெனிசுலாவை எப்படி எங்கள் கட்டுப்பாட்டுல கொண்டு வந்தோமோ, அதேபோல ஈரானையும் கொண்டு வந்துட்டோம். கடைசியா நாங்கள் தாக்குதல் நடத்தியதுல இருந்து கடந்த சில நாட்களா அங்கு எந்தத் துப்பாக்கிச்சூடும் நடக்கல. நாங்கள் இப்போ எங்க நடவடிக்கையை உடனடியாக நிறுத்தினால் கூட, ஈரான் பழையபடி மீண்டு வர 25 ஆண்டுகள் ஆகும்!” அப்படின்னு ஒரு நெத்தியடி அடிச்சிருக்காரு ட்ரம்ப்.

அடுத்தபடியா வரப்போற அமெரிக்க அதிபர்கள் இந்த ஈரான் விவகாரத்தால கவலைப்படக் கூடாதுங்கிறதுக்காகவே, இதையெல்லாம் இப்போவே முடிச்சுக்க விரும்புறதா ட்ரம்ப் சொன்னாரு. அதுமட்டுமில்லாம, “சீனா அதிபர் ஜி ஜின்பிங் கிட்டயே நான் தனிப்பட்ட முறையில சொல்லிட்டேன், இந்த விவகாரத்துல தலையிடாதீங்கன்னு. அவங்களும் பெருசா தலையிடல” அப்படின்னு போட்டு உடைச்சிட்டார்!

மறுபக்கம், ஈரான் சும்மா இருக்குமா? ஈரானின் மூத்த ராணுவ தளபதி அலிரேசா எல்ஹாமி, “அமெரிக்காவின் அச்சுறுத்தல் தொடருது. எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ள எங்களது ராணுவம் தயாரா இருக்கு. எங்க ஆயுதங்கள் எதிரிகளைத் துவம்சம் செய்யும்!” அப்படின்னு பதிலடி கொடுத்திருக்காரு. நிலைமை எப்ப வேணாலும் சூடாகவும் வாய்ப்பிருக்கு.

இந்த மோதலின் பின்னணி என்னன்னு விளக்கிய துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கையில் எடுத்திருக்கும் ரகசிய ஆயுதங்களைப் பத்தி சிலிர்க்க வைக்கும் தகவல்களை வெளியிட்டார். “ஈரான் விவகாரத்துல எங்களோட முழு திட்டத்தையும் வெளிப்படையா சொல்ல முடியாது.

அப்படி சொன்னா அது அதிபர் ட்ரம்பின் முடிவெடுக்கும் திறனைக் கட்டுப்படுத்திடும். எங்ககிட்ட பல வழிமுறைகள் இருக்கு. பொருளாதார அழுத்தம், ராணுவ அழுத்தம், தூதரகம் மூலமான அழுத்தம் மற்றும் ரகசியமான முறைகள்னு எல்லாமே அதிபரின் கையில் இருக்கிற கருவிகள்!”

குறிப்பா, ஹார்மூஸ் நீரிணையில வணிகக் கப்பல்களை ஈரான் தொடர்ந்து குறிவச்சு தாக்குறதுதான் இந்த மோதலுக்கு முக்கியக் காரணம். கச்சா எண்ணெய் விநியோகத்தை முடக்கி உலகளாவிய ஒரு எரிசக்தி நெருக்கடியை உருவாக்க ஈரான் முயல்வதாகவும், பயங்கரவாதிகளைப் போல அவர்கள் செயல்படுவதாகவும் வான்ஸ் குற்றம்சாட்டினார்.

இந்தக் கப்பல் போக்குவரத்து முடங்கியதால்தான் உலகளவில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறா உயர்ந்து, சர்வதேச பொருளாதாரத்துக்கே பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இதனிடையே, சீனா பத்திப் பேசும்போது வான்ஸ் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைச் சொன்னார். “சர்வதேச விவகாரங்கள் தங்களுக்கு சாதகமாக இல்லைனா கூட, வணிகக் கப்பல்கள் மீது குண்டு போடும் ஒரு நாட்டைப் போல சீனா நடந்துக்காது.
அமெரிக்காவுடன் பொருளாதார ரீதியாக ஈரானைத் தனிமைப்படுத்துவதில் சீனா சற்று பொறுப்புணர்வுடன் செயல்படவே தயாரா இருக்குன்னு நினைக்கிறேன்” அப்படின்னு தெரிவித்தார். இது  பார்க்குறதுக்கு வெறும் வார்த்தைப் போர் மாதிரி தெரிஞ்சாலும், ஹார்மூஸ் நீரிணையில் நடக்கும் இந்த அதிகாரப் போட்டி உலகப் பொருளாதாரத்தையே ஆட்டிப்படைச்சிட்டு இருக்கு.
அமெரிக்கா தன் பலத்தை முழுசா காட்டிவிட்டதாகச் சொன்னாலும், வளைகுடா நாடுகளில் ஈரான் அவ்வப்போது பதிலடி கொடுத்து வருவதால் பதற்றம் இன்னும் குறைந்தபாடில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *