மாணவர்களின் திறமையை ஆசிரியர்கள் கண்டறிய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
தில்லியில் தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து குழந்தை பருவத்தைப் பாதுகாக்க ஆசிரியர்கள் பாடத்திட்டங்களை தாண்டி வழிகாட்ட வேண்டும் என்று கேட்டு கொண்டார். மாணவர்களின் திறமையை ஆசிரியர்கள் கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
போதை பழக்கத்தில் சிக்கி இருக்கும் குழந்தைகள் விளையாட்டுகளில் தீவிர ஆர்வம் காட்டத் தொடங்கினால், படிப்படியாக அந்தப் பழக்கத்திலிருந்து விடுபடக்கூடும் என்று தெரிவித்தார்.
இது தொடர்பான அச்சங்கள் குறித்து இன்றைய ஆசிரியர்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கூறினார். இத்தகைய குழந்தைகளின் நடவடிக்கைகள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.




