Tirupur : மிதமான மழை பொழிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!

Advertisements

திருப்பூரில் மிதமான மழை பொழிந்து வெக்கை தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூரில் கடந்த சில மாதங்களாக மழை இன்றி வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

இந்நிலையில் நேற்றுக் காலை முதல் வெயிலில் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. திடீரெனப் பிற்பகலில் வானில் முகில் சூழ்ந்து மழை பெய்தது. காமராஜர் சாலை, ராயபுரம், கரட்டாங்காடு, அரண்மனை புதூர், கருவம்பாளையம், வீரபாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அரை மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மழை பெய்து வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *