Wayanad Landslide: பலி எண்ணிக்கை 168 ஆக உயர்வு – 2வது நாளாகத் தொடரும் மீட்புப்பணி!

Advertisements

கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி 176-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். 500 பேரின் கதி என்ன? என்பது தெரியாத நிலையில், மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வயநாடு நிலச்சரிவு: பிரதமர் மோடி உன்னிப்பாகக் கவனிப்பு

வயநாடு நிலச்சரிவு சம்பவம் மற்றும் அது தொடர்பான மீட்புப்பணிகளை பிரதமர் மோடி மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருவதாக மத்திய மந்திரி ஜார்ஜ் குரியன் தெரிவித்துள்ளார். நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மீட்புபணியில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று ஜார்ஜ் குரியன் தெரிவித்துள்ளார்.

வயநாடு நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 தமிழர்கள் உயிரிழப்பு

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டை சேர்ந்த காளிதாஸ், கல்யாண குமார், ஷிஹாப் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் 6 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வயநாடு: காணாமல் போனோர் பற்றித் தகவல் தெரிவிக்க உதவி எண் வெளியீடு

வயநாடு நிலச்சரிவில் காணாமல் போனோர் பற்றித் தகவல் தெரிவிக்க அவசர உதவி எண் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி வயநாடு மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையத்தின் 807 840 9770 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காணாமல் போனோர் மற்றும் மருத்துவமனையில் உள்ளோர் பற்றித் தகவல் தெரிவிக்கவும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலி எண்ணிக்கை உயர்வு

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *