தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கும் விஜய்….! முதல் கையெழுத்தாகப் போகும் 2 மெகா திட்டங்கள்….!

Advertisements

முதலமைச்சராக விஜய் ஆட்சி பொறுப்பேற்ற உடன் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டத்தை கையெழுத்திட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தவெக தலைவர் தலைவர் விஜய், வெற்றி பெற்ற வேட்பாளர்களை சந்தித்து நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து, ஆலோசனை கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக விஜய் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த சூழலில் ஆட்சிக் கட்டிலில் அமருவதற்கான நடவடிக்கைகளை த.வெ.க. தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

தவெக கட்சியின் வெற்றிக்கான கதாநாயகனாக, தேர்தல் அறிக்கையும் அக்கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், முதலமைச்சராக விஜய் ஆட்சி பொறுப்பேற்றதும் 2 முக்கிய திட்டங்களில் கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதில், அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டத்தையும்,

ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற திட்டத்தையும் கையெழுத்திட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *