விஜய் வீட்டில் திரிஷா – சங்கீதா சண்டை..பனையூரில் பரபரப்பு..! 

Advertisements
தமிழ்நாடு முழுவதும் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வரும் சமயத்தில்,  தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.. ஏற்கனவே கரூர் பொதுக்கூட்டத்தில் நடைபெற்ற சோக நிகழ்வு மற்றும் ஜனநாயகம் படத்துக்கு தடை விதித்த விவகாரம் என பல சோதனைகளை சந்தித்து வரும் விஜய்க்கு தற்பொழுது சங்கீதா மூலமாக மிகப் பெரிய சோதனை ஏற்பட்டிருக்கிறது .
பல ஆண்டுகளாக பிரிந்து வாழும் சங்கீதா,  தற்பொழுது திடீரென விவாகரத்து கோரி மனு கொடுத்தது ஏன் ? தற்பொழுது சங்கீதா எங்கே இருக்கிறார்? பின்னணியில் என்ன நடந்தது என்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியே கசிந்து இருக்கின்றன.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடிகர் விஜய்யும் – சங்கீதாவும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். தற்பொழுது , சங்கீதா லண்டனில் இருப்பதாக பேசப்பட்ட நிலையில் , அவர் சென்னை பனையூரில் விஜய் குடியிருக்கும் அதே பங்களாவில் தான் இருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியே தெரிந்திருக்கிறது .
அதாவது , பனையூரில் உள்ள மிகப்பெரிய பங்களாவில் நடிகர் விஜய்யும் சங்கீதாவும் தனித்தனியாக வசித்து வருகிறார்கள் . அந்த பங்களாவின் கீழ்த்தரத்தில் சங்கீதா வசித்து வருகிறார் . மேல் தளத்தில் விஜய் வசித்து வருகிறார் இந்த பங்களாவில் லிப்ட் வசதி இருக்கிறது .
ஒரே பங்களாவில் இருவரும் வசித்தாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது கிடையாது.  சமையல் மற்ற பணிகள் எல்லாமே தனித்தனியாக தான் நடைபெற்று வருகின்றன . இதனிடையே , விவாகரத்து பெறுவது என்று நடிகர் விஜய் ஏற்கனவே முடிவெடுத்து வைத்திருக்கிறார் . அதே போல் சங்கீதாவும் முடிவு எடுத்து வைத்திருக்கிறார் .
இது சம்பந்தமாக,  சில முக்கிய நபர்கள் மூலம் வீட்டில் பஞ்சாயத்து நடைபெற்று இருக்கிறது . அந்த பஞ்சாயத்தின் போது விவாகரத்து செய்வதாக இருந்தால் தனக்கு 50 கோடி தர வேண்டும் என சங்கீதா கேட்டிருக்கிறார் . ஆனால் விஜய் தரப்பில் 15 கோடி ரூபாய் தருகிறேன் என்று பேசியிருக்கிறார் . இந்த ஒப்பந்தம் படியாத சூழ்நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்திருக்கிறது .
இது மட்டுமில்லாமல் மாதா மாதம் ஜீவானம்சமாக இருவது லட்சம் தர வேண்டும் என்றும் சங்கீதா கேட்டு வருகிறார் . இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சங்கீதா நடிகர் விஜய்யிடமிருந்து விவாகரத்து கேட்டு மனு செய்திருக்கிறார் .
அந்த மனுவில் , ஒரு நடிகைக்கும் எனது கணவருக்கும் தொடர்பு இருக்கிறது . இந்த தொடர்பை நான் எவ்வளவோ தடுத்து நிறுத்தியும் அவர்கள் கேட்கவில்லை.  இதனால் என் குழந்தைகள் அவமானப்படுகிறார்கள் என பல குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார் .
அந்த நடிகை வேறு யாருமல்ல ஊர் அறிந்த பிரபலமான நடிகை திரிஷா தான் அவர் , இதனிடையே ஒருமுறை திரிஷா விஜய் வீட்டுக்கு வந்திருக்கிறார் . அப்பொழுது விஜயும் திரிஷாவும் லிப்டில் ஏறி மேல்மாடிக்கு சென்று இருக்கிறார்கள் .
இதை அறிந்த சங்கீதா விஜய் இடமும் திரிசா இடமும் சண்டை போட்டு இருக்கிறார் . வீட்டில் மிகப் பெரிய குடுமி பிடிசண்டை நடந்து திரிசா பின்னர் வெளியேறி இருக்கிறார்.
இந்த சண்டை நடந்த போது நடிகர் விஜயின் ஆடிட்டர் வெங்கட்ராமனும் ,விஜயின் நெருங்கிய நண்பரான விஷ்ணு ரெட்டியும் சமாதானம் செய்து திரிஷாவை வெளியே அனுப்பி இருக்கிறார்கள் என்பது முக்கிய செய்தியாகும் .இந்த நிலையில் தான் மும்பையில் உள்ள சில வழக்கறிஞர்கள் மூலம் விஜய் க்கு எதிராக சங்கீதா வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்..
இதனிடையே , நடிகர் விஜய் தான் தற்போது திட்டமிட்டு சங்கீதாவை விவாகரத்து நோட்டீஸ் அனுப்பும்படி ஏற்பாடு செய்திருக்கிறார் என்பது அதிர்ச்சி செய்தியாகும் . தேர்தல் மிக அருகில் நெருங்கி வரும் சமயத்தில் சங்கீதாவை விஜய்க்கு எதிராக குரல் கொடுப்பதற்கு திமுக தரப்பில் வேலை செய்து இருக்கிறார்கள் .இதற்கு சங்கீதாவும் தயாராகி இருக்கிறார்.
இதை அறிந்து கொண்ட விஜய் தேர்தல் நெருங்கிய சமயத்தில் சங்கீதா விவாகரத்து கேட்டு பல பிரச்சினைகளை கிளப்பலாம். அது பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை கருதி தான் சில நபர்கள் மூலமாக சங்கீதாவை விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப சொல்லுங்கள் இத்துடன் பிரிந்து விடலாம் என்று சொல்லி இருக்கிறார் ..
அதன் பெயரில் தான் பல ஆண்டுகாலமாக பிரிந்து இருந்த சங்கீதா இப்பொழுது விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் .
இதனிடையே , சங்கீதா தனது மனுவில் குறிப்பிட்ட நடிகை விஜயுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்தன என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த படங்களை,  சமூக வலைத்தளங்களில் பரவ விட்டதும் திரிஷா தான் என்பது தெரிய வந்திருக்கிறது . விஜயுடன் திரிஷா இருக்கும் புகைப்படங்களை நடிகை திரிஷாவே இணையதளங்களில் பரவ விட்டு இருக்கிறார் என்பது முக்கிய செய்தி ஆகும்.
தற்பொழுது விஜய் இடம் 50 கோடி ரூபாய் கேட்டு வரும் நிலையில் அவர் 15 கோடி ரூபாய் தருவதாக சொல்லியிருக்கிறார் .
இந்த நிலையில் , நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதன்படி முடிவெடுத்துக் கொள்ளலாம் என விஜய் தற்பொழுது ஆலோசனையில் இருக்கிறார் ..
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *