tamilnadu:கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவி நீட்டிப்பு?

Advertisements

கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை:தமிழக கவர்னராக இருந்து வரும் ஆர் என் ரவியின் பதவிக்காலம் இன்றுடன் (புதன்கிழமை) முடிவடைகிறது. எனவே, தமிழகத்திற்கு புதிய கவர்னர் நியமிக்கப்படுவாரா? அல்லது அவருக்கே பதவி நீட்டிப்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் நிலவியது.

இதற்கிடையில் அண்மையில் டெல்லி சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட சில மந்திரிகளைச் சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற உள்ள கவர்னர்கள் மாநாட்டில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்க இருப்பதாகவும் இதனால், அவருக்குப் பதவி நீட்டிப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவிக்கலாம் இன்றுடன் நிறைவு பெறுகிற நிலையில் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்திற்கு புதிய கவர்னர் தொடர்பான அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை என்பதால் அவரே கவர்னராகத் தொடர்வாரெனக் கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலைக்குள் வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *