மதுராந்தகம் சிறுமி பாலியல் வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க.பொதுச் செயலாளர் எடப்பாடி பழனின்சாமி வலியுறுத்தியுள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், தனது ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு சிறப்பாக இருப்பதாக இன்றைய முதலமைச்சர் ஜோசப்விஜய் வாய்கிழிய பேசிய பிரச்சாரக் கூட்ட மேடையின் பந்தலைப் பிரிப்பதற்குள்ளேயே மதுராந்தகம் பகுதியில் ஒரு மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை ஆளாகியிருக்கும் அவலம் அரங்கேறி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளர்.
மேலும், மதுராந்தகம் அருகே கொங்கரை பகுதியில் 5-ஆம் வகுப்பு படிக்கும் மாற்றுத் திறனாளி சிறுமி, வீடு புகுந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றனஎ என்றும், ஒரு சிறுமிக்கு தனது சொந்த வீட்டிலேயே பாதுகாப்பு இல்லாத ஒரு பொல்லாத ஆட்சியை நடத்தும் இன்றைய முதலமைச்சர் ஜோசப்விஜய் எந்த முகத்தை வைத்துக் கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார் என கேள்வி எழுப்பினார்.
அண்ணன், தாய் மாமன், என்று தனக்கு பிரேண்டிங் செய்துகொள்ளும் நடிப்பு முதலமைச்சர் பாதிக்கப்பட்ட இந்த சிறுமிக்கு அண்ணனாகவோ, தாய் மாமனாகவோ இருந்தால் இப்படி ஒரு நிகழ்வை நடக்க விட்டிருப்பாரா என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்..

