விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற திருமாவளவன்..!

Advertisements

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மெஜாரிட்டியை உறுதி செய்ய தோழமைக் கட்சிகளின் ஆதரவைத் திரட்டி வரும் முதல்வர் விஜய், விசிக தலைவர் தொல். திருமாவளவன் அவர்களைச் சந்திக்க அவரது அலுவலகத்திற்குச் சென்ற நிகழ்வு அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மே 9 அன்று விசிக தனது நிபந்தனையற்ற ஆதரவுக் கடிதத்தை முதல்வர் விஜய்யிடம் வழங்கியது. ஆளுநர் ஆட்சி அமைவதைத் தவிர்க்கவும், மதச்சார்பற்ற அரசை நிலைநிறுத்தவும் இந்த முடிவை எடுத்ததாக திருமாவளவன் அறிவித்தார்.

ஆதரவு அளித்தமைக்காக நன்றி தெரிவிக்கவும், அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசிக்கவும் திருமாவளவனைச் சந்திக்க முதல்வர் விஜய் விசிக அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பின் போது விசிக அலுவலகம் மற்றும் அசோக் நகர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கட்சித் தொண்டர்கள் பெருமளவில் திரண்டதால் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பாகக் காணப்பட்டது.

இந்தச் சந்திப்பில் துணை முதல்வர் பதவி அல்லது அமைச்சரவையில் பங்கு உள்ளிட்ட அதிகாரப் பகிர்வு குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *