5 ஆண்டுகளில் திமுக அரசு சாதித்தது என்ன…?

Advertisements

சென்னையில் அரைநூற்றாண்டு வளர்ச்சியை 5 ஆண்டுகளில் திமுக அரசு சாதித்து காட்டியுளளது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் திமுக ஆட்சியில் படைத்த சாதனை குறித்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், சென்னையில் அரைநூற்றாண்டு வளர்ச்சியை 5 ஆண்டுகளில் திமுக அரசு சாதித்து காட்டியுளளது என தெரிவித்தார்.

19 முடிவுற்ற பாலங்கள், 236 பூங்காக்கள் மேம்பாடு, 1,442 கிலோமீட்டர் பரப்பளவில் மழைநீர் வடிகால்கள் என்பன உள்ளிட்ட திமுக ஆட்சியின் பணிகளை பட்டியலிட்டார். இதைத்தொடர்ந்து, பல்வேறு முதல்வர் படைப்பகங்கள், தாழ்தள மின் பேருந்துகள் எனச் சென்னையின் தோற்றம் ஏற்றம் பெற்றிருக்கிறது என்று குறிப்பிட்டார்.

உலகத்தர உட்கட்டமைப்புடன் எழில்மிகு சென்னையாக 2030-இல் வளர்த்தெடுப்போம் என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *