இட்லி கடையால் வந்த பாசம்..அருண் விஜய்க்காக தனுஷ் என்ன செய்திருக்கார் பாருங்க?

Advertisements

தனுஷின் நடிப்பில் அடுத்ததாக குபேரா, இட்லி கடை ஆகிய படங்கள் வரவிருக்கின்றன. கடைசியாக அவர் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் எதிர்பார்த்ததை விட இல்லை. அதேபோல் அவர் இயக்கி நடித்த ராயன் திரைப்படமும் படுதோல்வியைத்தான் சந்தித்தது. இதனால் எப்படியாவது ஒரு வெற்றியை கொடுத்துவிட வேண்டுமென்பதில் அவர் முனைப்பாக இருக்கிறார். இந்தச் சூழலில் அருண் விஜய்க்காக அவர் செய்திருக்கும் செயலை பார்த்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படமும், நடிப்பில் வெளியான ராயன் திரைப்படமும் தோல்வியை சந்தித்தன. இதன் காரணமாக இட்லி கடை மீது பெரிய நம்பிக்கையை வைத்திருக்கிறார்.முதலில் அந்தப் படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாவதால் இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயிருப்பது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் இட்லி கடை படத்தில் நடித்தபோது தனுஷுக்கும் , அருண் விஜய்க்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்த நட்பு இப்போது ரெட்ட தல படத்திலும் தொடர்கிறது. அதாவது அந்தப் படத்தில் அருண் விஜய்க்காக தனுஷ் ஒரு பாடலை பாடியிருக்கிறார். படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இதுகுறித்த அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் பாடியிருக்கும் இந்தப் பாடலை வெளிநாட்டில் படமாக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *