CV . சண்முகத்தின் இல்லத்தில் அதிமுக MLA -க்களை சந்தித்த விஜய்..!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், 3வது இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிமுகவில் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ள நிலையில், இபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், சிவி சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு அணியும் போட்டி போட்டு கூட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

இதனால் அதிமுக மீண்டும் உடையும் நிலை உருவானது. இந்தநிலையில் தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள தவெகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆலோசனை நடத்தினார்கள். இதனையடுத்து இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர், முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சிக்கு அதிமுகவின் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறினார்.

இந்த நிலையில் தி.மு.கவின் உதவியோடு அ.தி.மு.க ஆட்சி அமைப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி எங்களிடம் தெரிவித்தார். இதில் தான் முதலமைச்சராவது தொடர்பான தகவலையும் கூறினார். தி.மு.கவை எதிர்த்து தொடங்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க, இ.பி.எஸ் கூறிய முடிவை கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானதாகவும் சி.வி.சண்முகம் கூறினார்.

எனவே தி.மு.கவுடன் இணையக்கூடாது என்றோம். அதை இ.பி.எஸ் ஏற்கவில்லை, இதனையடுத்து பெரும்பான்மை அ.தி.மு.க எம்எல்ஏக்களை கூட்டி தீர்மானம் இயற்றினோம். அதில் தவெகவிற்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளோம் என்று கூறினர்..

இந்நிலையில் , தான் முதலைமைச்சர் விஜய் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெரும் நிலையில் , தபொழுது எடப்பாடி பழனிசாமிக்கு போர்க்கொடி தூக்கிய சிவி. சண்முகம் இல்லத்திற்கு சென்று , அங்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து வருகிறார்.. இன்னும் eps – யை சந்திக்காத நிலையில் , விஜயின் அரசியல் கணக்கை யூகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *