
வருகின்ற 2026 – சட்டமன்ற தேர்தலை ஒட்டி அணைத்து கட்சிகளும் தொகுதி பங்கீட்டு குறித்த பேச்சுவார்த்தையை நிறைவு செய்ய தீவீரம் காட்டி வருகின்றன .. அந்த வகையில் , நேற்றைக்கு அதிமுக – பாஜக கூட்டணியில் கட்சிகளில் , பாஜகவுக்கு 27 தொகுதிகளும் , பாமகவுக்கு 18 தொகுதிகளும் , அமமுக – விற்கு 11 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் நேற்றைக்கு வெளியானது..
அந்த வகையில் தற்பொழுது வரை தமிழக வெற்றி கழகம் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காத நிலையில் , இந்த தேர்தலை தனியாகத்தான் சந்திக்குமோ என்ற கேள்வி அனைவரிடம் எழுந்துள்ளது ..இந்த நிலையில் , முன்னதாக ஒரு முறை எங்கள் கூட்டணிக்கு வாருங்கள் என்று தவெக – தலைமை திருமவிடம் கேட்ட நிலையில் , அதற்கு திருமா மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியானது..
இந்நிலையில் , மீண்டும் ஒரு முறை தவெக தரப்பு போதிய சீட் , உரிய மரியாதை உங்களுக்கு அளிக்கப்படும் என்று திருமாவளவனை அழைத்ததாக தகவல்கள் இன்று வெளியாகியுள்ளது… இந்நிலையில் , திமுகவை விட்டு வெளியேறினால் , நம்பக தன்மை போய்விடும் என திருமா எண்ணுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன ..
மேலும் நீங்கள் என்னை கூட்டணிக்கு அழைத்ததற்கு நன்றி .. நான் ஒருபோதும் திமுக – கூட்டணியை விட்டு வெளியேற மாட்டேன் என்று கூறி உள்ளார் .. மேலும் , அவர் எதிர்பாத்த சீட்டுகள் கிடைக்காமல் போனாலும் அவர் கூட்டனியை விட்டு வெளியேற முடிவை அவர் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது..



