Advertisements

இந்திய சினிமாவின் 71 ஆம் ஆண்டு தேசிய விருது வழங்கும் அறிவிப்புகள் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியானது கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான சிறந்த படங்கள் நடிகர் நடிகைகளுக்கு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் சிறந்த நடிகராக ஷாருக்கான் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜவான் என்ற படத்தில் நடித்ததற்காக அவர் தேர்வாகியுள்ளார் இதேபோல் சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி தேர்வாணார்
தமிழில் சிறந்த துணை நடிகர்களாக ஆர் எஸ் பாஸ்கர் விஜயராகவன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் . தமிழில் பார்க்கிங் படம் மூன்று விருதுகளை பெற்றது . சிறந்த இசையமைப்பாளராக ஜி வி பிரகாஷ் தேர்ந்து எடுக்கப்பட்டார். நடிகை ஊர்வசி சிறந்த துணை நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் “உள்ளொழுக்கம்” என்ற மலையாள படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் தேசிய விருது குறித்து நடிகை ஊர்வசி காரசாரமாக பேசி வருகிறார் எனக்கு விருது கொடுத்த தேசிய சினிமாவுக்கு நன்றி அதேசமயம் ஷாருக்கானுக்கு எந்த அடிப்படையில் தேசிய விருது கொடுத்தீர்கள் அவர் ஒரு கமர்சியல் கதாநாயகன் அவருக்கு தேசிய விருது கொடுத்தது எந்த வகையில் நியாயம் . சிறந்த கதாநாயகன் விருது பெறுவதற்கு என்ன அளவு கொண்டு இருக்கிறது?
மேலும் மலையாளத்தில் வெளியான ஆடு ஜீவிதம் படம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் படமாக இருக்கிறது இந்த படத்தை பற்றி விருது வழங்கும் குழுவினர் கண்டுகொள்ளவே இல்லை இது மட்டுமல்ல இந்த படத்தில் நடித்த பிருதிவி ராஜ் ஆண்டு கணக்கில் தவமிருந்து உயிரை கொடுத்து அந்த கேரக்டராகவே மாறி நடித்திருக்கிறார் அவரையும் கண்டு கொள்ளவில்லை
இதற்குப் பின்னால் அரசியல் சதி இருக்கிறது நடிகர் பிரிதிவிராஜ் எம்புரான் என்ற படத்தை இயக்கினார். படத்தில் குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றன பின்னர் சர்ச்சை ஏற்பட்டதால் அந்த காட்சிகள் நீக்கப்பட்டு படம் வெளியிடப்பட்டது . இந்த படத்தை பிருதிவிராஜ் இயக்கிய ஒரே காரணத்துக்காக அவர் நடித்த ஆடு ஜீவிதம் படமும் அவரது நடிப்பும் கண்டுகொள்ளப்படவில்லை இது மிகப்பெரிய மோசடி ஆகும்
அதேபோல் நடிகர் விஜயராகவன் துணை நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் உண்மையிலேயே அவர் கதாநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும் அந்த அளவுக்கு அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது . தேசிய விருது ஒன்றும் ஓய்வு பெற்ற பிறகு கிடைக்கும் சான்றிதழ் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது குறித்து மத்திய அரசு தலையிட்டு சரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசி உள்ளார்
ஊர்வசியின்இந்த பேச்சால் இந்தியா முழுவதும் உள்ள சினிமாத்துறையினர் சினிமாவுக்கு வழங்கும் தேசிய விருது குறித்து என்ன அளவுகோல் இருக்கிறது என்பது போன்ற தகவல்களை தெரிவிக்க வேண்டும் என போர்க்கொடி பிடிக்க ஆரம்பித்துள்ளனர்
Advertisements

