Uttar pradesh : போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி : கேபிள் கார் சேவை டிசம்பரில் இயக்கம்.!

இந்தியாவின் முதல் நகர்ப்புறக் கம்பிவட வழிப்பாதைப் போக்குவரத்து உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி நகரத்தில் டிசம்பர் மாதத்தில் தொடங்க உள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் ஆன்மீகம், பொருளாதாரம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு வகைகளில் முதன்மை பெற்று விளங்கும் வாரணாசி நகரம் குறுகலான தெருக்களையும் மக்கள் நெருக்கம் மிக்க பகுதிகளையும் கொண்டுள்ளது. 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி வாரணாசித் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஆனார்.

பிரதமராகவும் ஆனார். அப்போது முதல் இந்த நகரின் வளர்ச்சிக்குப் பல்வேறு திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறார். வாரணாசி கண்டோன்மெண்ட் ரயில் நிலையம் முதல் கோடாலியா வரை பொதுமக்கள் போக்குவரத்துக்கான கம்பிவட வழிப்பாதை அமைக்கும் 807 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்துக்கு 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அடிக்கல் நாட்டினார்.

இந்தத் திட்டத்தின் 96 விழுக்காடு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதனால் கம்பிவட வழிப்பாதைப் போக்குவரத்து வெள்ளோட்டம் நடைபெற்று வருகிறது. இதன் பயணியர் போக்குவரத்து டிசம்பர் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் வாரணாசிக்கு ஆன்மீகச் சுற்றுலா வரும் வெளியூர், வெளிநாட்டு மக்களும் இந்தக் கம்பிவட வழிப்பாதைப் போக்குவரத்தைப் பயன்படுத்துவர் என்றும்,

இதனால் சுற்றுலாத்துறை வளர்ச்சி ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மலைமுகடுகள், பள்ளத்தாக்குகள், சாலை அமைக்க முடியாத பகுதிகளில் தான் இத்தகைய கம்பிவழிப் பாதைகள் அமைக்கப்படும். இந்தியாவிலேயே முதன்முறையாக நகர்ப்புறக் கம்பிவட வழிப்பாதைப் போக்குவரத்துத் திட்டம் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி நகரத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் வணிக முறையில் வெற்றிபெற்றால் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பிற நகரங்களிலும் இதேபோன்ற திட்டங்களைச் செயல்படுத்த வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *