கிரிக்கெட் ஜாம்பவானும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனுமான டோனி, கிரிக்கெட் ஆடுகளத்தில் தனது விளையாட்டு நுணுக்கங்களுக்காவும், கனநேரத்தில் முடிவு எடுக்கும் திறனுக்காகவும் பெரிதும் போற்றப்படுபவர்.
கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றநிலையில் சி.எஸ்.கே அணிக்காக ஐ.பி.எல்-லில் மட்டும் விளையாடி வருகிறார்.
ஓய்வுக்கு பின்னர் தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார். குறிப்பாகத் தனது மகள் ஜிவாவுடன் பொழுதுபோக்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ள டோனி, மகளுடன் இணைந்து செல்லப்பிராணி பராமரிப்பில் ஈடுபட்டார்.
தனது வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் செல்லப்பிராணி நாய்க்கு, டோனி ‘சீப்பு’வைக்கொண்டு வாரி விட்டார். அருகில் உட்கார்ந்திருந்த ஜிவா, தந்தையின் நடவடிக்கையைப் பார்த்துச் சிரித்தப்படி நாயுடன் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.