காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை..களப்பணியில் தீவிரம்..!

Advertisements

2026-ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான, தேர்தல் அறிக்கை குழு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், சிவகங்கை நாடாளு மன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இராமநாதபுரத்தில், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ராஜாராம்பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இராமநாதபுரம் மாவட்டத்தின் பொறுப்பாளர்களான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் உறுப்பினர் சண்முகம், ஆண்டனி விஜிலியஸ்கிளமண்ட், செல்வக்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், தேர்தல் அறிக்கை குழுவினர், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், வணிகர்கள் ஆகியோரிடம் கருத்துக்களை கேட்டு, அவர்களின் கோரிக்கைகளை மனுவாக பெற்றனர். மேலும், இராமநாதபுரம் மாவட்டத்தின் வளர்ச்சிகான திட்டங்கள் குறித்து, பொதுமக்களிடையே கருத்துக்களை கேட்டு, தேர்தல் அறிக்கை குழுவினர் பதிவு செய்தனர். கூட்டத்தில், மாவட்டத்தலைவர் ராஜாராம் பாண்டியன் என்கின்ற கோபால், மற்றும் மாநில, மாவட்ட, வட்டார தலைவர்கள், சார்பு அணி நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியை தொடர்ந்து, தேர்தல் அறிக்கை குழுவின் உறுப்பினர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில், நீண்ட காலத்திற்கு பின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டு, மாவட்டம் தோறும் கருத்து கேட்கப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும், இதன் அறிக்கையை விரைவில் அளிக்கப்படும் என்றும், இந்த அறிக்கை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், முத்துவேல் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை, சட்டமன்றத்தில் எடுத்துக்கூறி, அதனை நிறைவேற்றும் பணியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஈடுபடுவார்கள் என்றும் குழுவின் உறுப்பினர் சண்முகம் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *