Israel vs Iron War : போரை முடிவுக்குக் கொண்டு வர மோடி வலியுறுத்தல்..!

Advertisements

மேற்காசியாவில் நிலவும் பதற்றங்களை தணித்து, போரை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் என்று வலியுறுத்தி வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் கட்ட அமர்வு இன்று நடைபெற்றது. அப்போது மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, மேற்காசிய போரின் தொடக்கத்தில் இருந்தே இந்தியா ஆழ்ந்த கவலை தெரிவித்து வருவதாக தெரிவித்தார். மேற்காசியாவில் உள்ள தலைவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசியதாக கூறிய அவர், பதற்றங்களை தணித்து, போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்று அனைவரிடத்திலும் வலியுறுத்தி வருவதாக குறிப்பிட்டார். பொதுமக்கள், எரிசக்தி மற்றும் போக்குவரத்துக் கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.  வர்த்தக கப்பல்களை தாக்குவதோ, ஹார்முஸ் நீரிணை போன்ற சர்வதேச நீர்வழிகளை முடக்குவதோ ஏற்று கொள்ள முடியாத ஒன்று என்றும் அவர் கூறினார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *