தனி ஆளாக வென்று காட்டிய விஜய்..எனக்கு ஆச்சரியம் கலந்த சந்தோஷம்.!

விஜய் தனி ஆளாக வெற்றி பெற்றிருப்பது, ஆச்சரியம் கலந்த ஒரு சந்தோஷம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, தேர்தல் முடிவுகள் வந்தவுடன் திமுக தலைவர் ஸ்டாலினை, அரசியலை தாண்டி நண்பர் என்ற முறையில் அவரை சந்தித்ததாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், விஜய் ரசிகர்கள் கெட்டப் பெயர் ஏற்படுத்தி விடக்கூடாது என்று கேட்டுக் கொண்டார். தான் அரசியலில் இல்லாத போது முதலமைச்சர் விஜய் மீது ஏன் பொறாமைப்பட வேண்டும் என்று கேள்வி எழுப்பிய ரஜினிகாந்த், விஜய் தனி ஆளாக வெற்றி பெற்றிருப்பது, ஆச்சரியம் கலந்த ஒரு சந்தோஷம் அளிப்பதாகக் குறிப்பிட்டார்.

மேலும், விஜய் வென்றது மகிழ்ச்சி என்றும் அவர் மக்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *