
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகத் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
சென்னை:தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், தஞ்சாவூர், மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.



