Advertisements

தவெக தலைவர் விஜய்யின் கோரிக்கை குறித்து இறுதி முடிவெடுக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குத் தலைமை உத்தரவிட்டுள்ளதாகக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஆதரவு கோரி தவெக தலைவர் விஜய் இந்திய தேசிய காங்கிரஸிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறினார்.
தமிழகத்தில் கிடைத்திருக்கும் இந்த மக்கள் தீர்ப்பானது, அரசியலமைப்பை அதன் எழுத்துப்பூர்வமாகவும் மற்றும் அதன் ஆன்மாவோடும் பாதுகாக்க உறுதிபூண்டுள்ள ஒரு மதச்சார்பற்ற அரசாங்கத்திற்கானதே என்பதில் காங்கிரஸ் தெளிவாக உள்ளதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழக அரசாங்கத்தைப் பாரதிய ஜனதா கட்சியோ அல்லது அவர்களின் பினாமிகளோ எந்த வகையிலும் வழிநடத்தக் கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.
இதன்படி, தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கும் மாநில மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, விஜய்யின் கோரிக்கை குறித்து இறுதி முடிவெடுக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குத் தலைமை உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார்.
Advertisements




