திரையுலகில் பேரிழப்பு….! நடிகர் ஜீவாவின் தந்தை ஆர்.பி. சவுத்ரி உயிரிழப்பு….!

Advertisements

ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி உயிரிழந்தார்.

நடிகர் ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோரின் தந்தையும், இந்தியத் திரையுலகின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவருமான ஆர்.பி. சவுத்ரி, ராஜஸ்தானில் உள்ள உதய்ப்பூர் சென்றபோது, அவர் சென்ற கார் மீது லாரி ஒன்று மோதி விபத்துகுள்ளானது.
அதில் படுகாயம் அடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவருக்கு கட்சி தவைவர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாளை அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், புது முகங்களுக்கு அதிக வாய்ப்பு கொடுப்பது, புது இயக்குனருக்கு வாய்ப்பு கொடுப்பது என தனித்துவமான பாணியை பின்பற்றி பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.
இவர் சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் புதுவசந்தம், புரியாத புதிர், நாட்டாமை, சூரியவம்சம், துள்ளாத மனமும் துள்ளும் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *