
தமிழக பா.ஜ.க.வின் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் மாநிலத் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல்குமார் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பா.ஜ.க.விலிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார்.
இந்த நிலையில் அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளராக இருந்த நிர்மல்குமார் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நிர்மல் குமார் தனது சமூக வலைதள பக்கங்களில் அ.தி.மு.க. குறித்த பதிவுகளை நீக்கி உள்ளார். இன்று மாலை அவர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
எடப்பாடியார் FOREVER என வைக்கப்பட்டிருந்த கவர் போட்டோவையும் நிர்மல் குமார் நீக்கினார்.
