Kadambathur Police Station: காவல்துறையினரை கண்டித்து சாலை மறியல்!

கடம்பத்தூர் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் காவல்துறையினரை கண்டித்து போலீஸ் நிலையம் எதிரே கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவ்வழியாக 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் போலீஸ் எல்லைக்குப் பட்ட செஞ்சி மதுரா கண்டிகையைச் சேர்ந்த பாலாஜி அஜித் ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் கடந்த மூன்றாம் தேதி செஞ்சி மதுரா கண்டிகையிலிருந்து பேரம்பாக்கம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கார்  சிற்றம்பாக்கம் பச்சையம்மன் கோயில் அருகே சென்றபோது 15 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து கடமையாக தாக்கியுள்ளனர்.

மேலும் கார் கண்ணாடிகளையும் அடித்து சேதப்படுத்தினர். இதை அடுத்து தாக்குதலுக்கு உள்ளான பாலாஜி மற்றும் அஜித் ஆகியோர் திருவள்ளூர் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக கடம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் பாலாஜி என்பவர் புகார் கொடுத்துள்ளார். புகாரின் தொடர்பாக ஒருவரை மட்டும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

இந்தநிலையில் தாக்குதல் நடத்திய முக்கிய குற்றவாளிகள் உட்பட பலர் கிராமப்புறங்களில் சுதந்திரமாக சுற்றித் திரிவதாகவும், காவல்துறை இதுவரை அவர்களை கைது செய்யவில்லை என்பதை கண்டித்து வன்னியர் வாழ்வுரிமை சங்க தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான ரவிராஜ்  தாஸ் தலைமையில் புவியரசு லோகேஷ் தணிகாசலம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருவள்ளூர் கடம்பத்தூர் நெடுஞ்சாலையில் கடம்பத்தூர் போலீஸ் நிலையம் எதிரே  அமர்ந்து  திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் தாலுக்கா மற்றும் கடம்பத்தூர் இன்ஸ்பெக்டர் சங்கர் சுப்பிரமணியம் அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர்.

புயல் மழை காரணமாக அப்பணிகளில் போலீசார் ஈடுபட்டிருந்ததால் குற்றவாளிகளை பிடிப்பதி சிரமம் இருந்ததாகவும் ஓரிரு தினங்களில் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைப்போம் என உறுதி அளித்த பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.சம்பவத்தால் கடம்பத்தூர் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *