நா.த.க. ஒரு பொழுதுபோக்கு மன்றம் – அமைச்சர் துரைமுருகன்!

Advertisements

வேலூர்:

வேலூர் மாவட்டம், அணைக்கட்டில் மோடி அரசைக் கண்டித்து கண்டன பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று பேசினார்.

ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றி மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. எங்கள் ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள் என்று பொருள்.

டெல்லியில் பா.ஜ.க. வெற்றி பெற்றது குறித்து கேட்டதற்கு, வெதர் ஊருக்கு ஒவ்வொரு மாதிரியாக மாறும் ஆகையால் அரசியல் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப அங்கு அரசு நடக்கிறது.

எல்லா ஊரிலும் தாமரை மலரலாம், தமிழகத்தில் தாமரையை மலர வைக்க மோடியாலும் முடியாது, அந்தக் கூட்டத்தாலும் முடியாது.

ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்ததற்கு அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். அவர்கள் ஒரு பொழுதுபோக்கு மன்றம்.

தமிழகத்திற்கு மத்திய அரசு தொடர்ச்சியாக நிதி வழங்காமல் வஞ்சிக்கப்படுவதற்கு, இதே மாதிரி சும்மா இருந்து விடவும் முடியாது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் தோற்றது.

தற்போது டெல்லியிலும் தோற்றுள்ளது. அதற்கு எனச் செயற்குழு பொதுக்குழு கூட்டி நாங்கள் முடிவு செய்வோம் என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *