
காயிதே மில்லத்தின் 130-வது பிறந்தநாளை ஒட்டி வாலாஜா சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
காயிதே மில்லத்தின் 130-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணி அருகே வாலாஜா சாலையில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இசுமாயில் சாகிபு இந்தியாவின் முக்கியமான அரசியல் தலைவர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

