விஜய் ஈழத்தமிழர்கள் பற்றி பேசியது திருக்குறள் சொல்வதுபோல உள்ளது- சீமான்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திடீரென்று மீனவர்களையும் ஈழத்தமிழர்களையும் பற்றிப் பேசுவது பிரதமர் மோடி தமிழில் திருக்குறள் சொல்வதுபோல உள்ளதாகச் சீமான் தெரிவித்துள்ளார்.

சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாளையொட்டிச் சென்னையில் அவரது நினைவு இல்லத்தில் உருவப்படத்துக்குச் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாரதிய ஜனதா கொள்கை எதிரி என்றும், திமுக அரசியல் எதிரி என்றும் விஜய் பேசுவதாகக் குறிப்பிட்டார்.

திமுகவை ஒழிக்க வேண்டும் என்றால் முதலில் காங்கிரசைத் தான் ஒழிக்க வேண்டும் என்றும், குடும்ப அரசியல், வாரிசு அரசியல், மன்னராட்சியைத் தொடர்ந்து செய்து வருவது காங்கிரஸ்காரர்கள் தான் என்றும் சீமான் தெரிவித்தார்.

தம்பி விஜய் திடீரென்று மீனவர்கள், ஈழத்தமிழர்கள் பற்றிப் பேசுவது மோடி தமிழில் திருக்குறள் சொல்வதுபோல உள்ளது என்றும் சீமான் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *