ஈரானில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 126 டாலர் அளவுக்கு உயர்வு.!

ஈரானில் அமெரிக்கப் போர்த் திட்டம் பற்றி அதிபர் டிரம்பிடம் இராணுவ அதிகாரிகள் எடுத்துரைத்துள்ள நிலையில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் 126 டாலர் என்னும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

ஈரானுடனான பேச்சில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், அந்தத் தடையை உடைத்து நொறுக்கும் வகையில் குறுகிய கால மற்றும் மிக வலிமையான தாக்குதலை நடத்த அமெரிக்க இராணுவம் திட்டமிட்டுள்ளது.

இந்தப் புதிய போர்த்திட்டம் குறித்து அமெரிக்காவின் இராணுவ அதிகாரிகள் வெள்ளை மாளிகைக்குச் சென்று அதிபர் டொனால்டு டிரம்புக்கு எடுத்துள்ளனர்.

இந்தத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஒரு பீப்பாய் பிரன்ட் கச்சா எண்ணெய் விலை உக்ரைன் மீது படையெடுத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியபோது இருந்த அளவுக்கு உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை 7 விழுக்காடு உயர்ந்து 126 டாலராக உள்ளது.ஈரான் – அமெரிக்கா அமைதிப் பேச்சில் முன்னேற்றம் இல்லாமல் தேக்கநிலை ஏற்பட்டபோதே எண்ணெய் விலை உயரத் தொடங்கியது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *