Advertisements

வங்காளதேசம் :
வங்காளதேசத்தில் வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.
வங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், இந்த இடஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெறுவதாகவும், இதை ரத்து செய்ய வேண்டும் எனவும், டாக்கா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 30 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதை அடுத்து, 30 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என கூறி, உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தது. இதையடுத்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கல்லூரி, பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபடும் மாணவ-மாணவிகளுக்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார் விரட்டியடித்து வருகின்றனர். இந்த போராட்டத்தில் நடந்த வன்முறையில் ஏற்கனவே 6 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது. போராட்டம் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில் வங்காளதேசம் செல்வதை தவிர்க்குமாறு பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.

Advertisements


