சென்னையில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு..!

சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது..

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்நிலை வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதாகத் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்தக் காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *