சென்னை அருகே பனையூரில் தமிழக வெற்றிக் கழக அலுவலகம் உள்ள சாலையை இரும்புத் தடுப்புகள் வைத்து மூடியதால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் கடுமையான அவதியடைந்தனர்.
பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையகத்தில் அந்தக் கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா தலைவர் விஜய் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த விழாவையொட்டித் தமிழக வெற்றிக் கழகத் தலைமையகம் அமைந்துள்ள பகுதியில் சாலையில் இரும்புத் தடுப்புகள் வைத்து மூடியுள்ளனர்.
இதனால் தவெக அலுவலகம் உள்ள பகுதியில் வசிக்கூடியவர்கள் வீட்டை விட்டு காரில் வெளியே செல்ல முடியாமல் தவித்தனர்.
இதனிடையே மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழாவுக்கு வந்த தவெக நிர்வாகிகளை உள்ளே விடாமல் பவுன்சர்கள் சுமார் ஒரு மணி நேரமாக தடுத்து நிறுத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த தவெக நிர்வாகிகள் பவுன்சர்களை மீறி அலுவலகம் அருகே செல்ல முயன்றபோது பவுன்சர்கள் தடுத்து நிறுத்தியாதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.


