தமிழகம் முழுவதும் தொடங்கியது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.!

Advertisements

தமிழக முழுவதும் இன்று முதல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது.

தமிழக முழுவதும் இன்று முதல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி  வருகின்ற 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வு மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 412 தேர்வு மையங்களில், 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேரும், சிறைத் தேர்வர்களாக 281 பேரும் எழுதுகின்றனர்.
இதில், முதல் நாளில் தமிழ் உள்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. தொடர்ந்து, தேர்வறையில் முறைகேடுகளைத் தடுக்க 4 ஆயிரத்து 540 பறக்கும் படை ஆசிரியர்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்வறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு 3 ஆண்டு சிறை  தண்டனை விதித்து, நிரந்தரமாக தேர்வெழுதத் தடை விதிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *