வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து ஜனவரி மாதம் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம் என்று சொல்லும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திரை மறைவில் பி பிளான் திட்டம் ஒன்றை நடத்தி வருகிறார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
கேப்டன் விஜயகாந்த் மறைவால் தேமுதிகவிற்கு அனுதாப வாக்கு வங்கிகள் அதிகரிக்கும் என அனைத்து அரசியல் கட்சிகளும் கருதுகின்றன.
அந்த வகையில் தேமுதிகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என திமுக அதிமுக தவெக ஆகிய மூன்று கட்சிகளும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன . பிரேமலதா விஜயகாந்த்தை பொறுத்தவரையில் மூன்று கட்சித் தலைவர்களுடனும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் .
இருந்தபோதிலும் யாருடன் கூட்டணி என்பதை அவர் சொல்ல மறுக்கிறார் அதே வேளையில் சமீபகாலமாக அவர் கூட்டங்களில் பேசும் போது பொடி வைத்து பேச ஆரம்பித்திருக்கிறார் . அதாவது தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும் வெற்றி கூட்டணியில் தேமுதிக இருக்கும் என்று சொல்லி வருகிறார் . கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று சொல்லும் பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றும் பேசி வருகிறார்.
இதன் மூலம் அமைச்சரவையில் அவர் இடம் கேட்பதாக தெரிய வருகிறது. இது மட்டுமல்லாமல் பண பேரமும் பேசி வருகிறார் .
உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற பிரச்சார பயணத்தின் ஒரு பகுதியாக பழனிக்கு வருகை தந்த பிரேமலதா விஜயகாந்த் அங்குள்ள பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கூட்டத்தில் வாகனத்தில் நின்றபடி பேசினார் . அப்போது அவர் பேசும்போது கேப்டன் விஜயகாந்த் தெய்வமாக இருந்து நம்மை வழி நடத்துகிறார் வருகிற தேர்தல் நமக்கு முக்கியமான தேர்தல். நாம் இப்படியே அனுபவித்து கொண்டு இருக்க முடியாது .
இந்த முறை தேமுதிக இணைந்திருக்கும் கூட்டணியே வெற்றி பெறும் வருகிற ஆட்சி கூட்டணி ஆட்சியாக அமைவது உறுதி . தேமுதிக தொண்டர்கள் நான் முதல்வர் அல்லது துணை முதல்வர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் . எனக்கோ தேமுதிகவில் உள்ள ஒவ்வொரு தொண்டரும் நகராட்சி ஊராட்சி கவுன்சிலர் மாவட்ட கவுன்சிலர் எம்எல்ஏ எம்பி மந்திரியாக வேண்டும் . என்ற ஆசை இருக்கிறது வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவின் இந்த ஆசை சாதனை படைக்கும்.
இப்போது தமிழகத்தில் திமுக அதிமுகவிற்கு அடுத்து தேமுதிக தான் பெரிய கட்சி தமிழகத்தில் உள்ள 63 ஆயிரம் பூத்களில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு விட்டனர் . வருகிற ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி கடலூரில் நடக்கும் மாநாடு மிகப்பெரிய வெற்றி மாநாடாக அமையும் என்று பேசி இருக்கிறார் . தற்போது உள்ள சூழ்நிலையில் திமுக கூட்டணியில் இட ஒதுக்கீடு வரை அனைத்தும் பேசி முடித்து விட்டனர் .
இருந்தபோதிலும் திமுகவுக்கு ஒரு பயம் இருக்கிறது . அதாவது, ஒருவேளை அமித்ஷா எடுக்கும் நடவடிக்கைகளால் அதிமுக தவெக தேமுதிக கூட்டணி ஏற்படலாம் . அப்படி கூட்டணி அமைந்தால் அது திமுகவிற்கு பலவீனம் ஆகிவிடும் எனவே தேமுதிக யாருடனும் கூட்டணி சேராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் என திட்டம் திட்டி வருகிறார்கள் . ஆனால் பிரேமலதா விஜயகாந்த் தலா ஒரு தொகுதிக்கு 20 கோடி ரூபாய் தேவை என்றும் 15 தொகுதிகள் ஒதுக்கி தர வேண்டும் என்றும் மூன்று அமைச்சர் பதவிகள் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருவதாக தெரிகிறது .
ஒரு தொகுதிக்கு 10 கோடி ரூபாய் தரலாம் 9 தொகுதியை ஒதுக்கி தரலாம் அமைச்சர் பதவியை தருவதற்கு வாய்ப்பில்லை என திமுக தரப்பில் பேசப்பட்டுள்ளது . இதற்கிடையே அதிமுக தரப்பிலும் பிரேமலதா விஜயகாந்த் பேசியிருக்கிறார். அங்கு பேசும் பொழுது தனக்கு 20 தொகுதிகள் தர வேண்டும் . இதே போல் ஒரு தொகுதிக்கு 20 கோடி ரூபாய் பணம் தர வேண்டும் ஐந்து அமைச்சர் பதவிகள் தர வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது .
அதிமுகவை பொருத்த வரையில் 15 தொகுதிகள் தர தயாராக இருக்கிறார்கள் தேர்தல் செலவுக்குரிய பணமும் தருவதற்கு தயாராக இருக்கிறார்கள் ஆனால் அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பு இல்லை என பேசி வருகிறார்கள் . தமிழக வெற்றி கழகத்தை பொருத்தவரையில் அங்கு 40 தொகுதிகள் கேட்டிருக்கிறார். தேர்தல் செலவுக்கு பணம் உள்பட துணை முதல்வர் பதவியும் கேட்டதாக தெரிகிறது .
தமிழக வெற்றி கழகம் தரப்பில் துணை முதல்வர் பதவியை தவிர மற்ற கோரிக்கைகள் ஏற்கப்பட்டு விட்டதாக சொல்கிறார்கள் . இந்த சூழ்நிலையில் தான் மேற்படி மூன்று கட்சிகளும் தேமுதிகவை நம்பி இருக்கிறது . எனவே இந்த வாய்ப்பை நழுவ விட்டுவிடக்கூடாது என பிரேமலதா விஜயகாந்த் பி பிளான் திட்டம் ஒன்றை நிறைவேற்றி வருகிறார் .
ஜனவரி மாதத்திற்குள்ளாக எப்படியும் இவர்களில் யாராவது ஒருவர் நமது கோரிக்கைக்கு அடிபணிந்து வருவார் கள். அதுவரை நாட்களை கடத்திச் செல்ல வேண்டும். நிச்சயமாக நாம் எண்ணி படி பழம் கனிந்து நம் கையில் விழும் என எதிர்பார்க்கிறார். இதனால்தான் கூட்டணிக்கு குறித்து தனது முடிவை தெரிவிக்காமல் இருக்கிறார். இதற்கிடையே எடப்பாடி பழனிச்சாமி இடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் பொழுது எப்படியாவது தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வந்து விடுங்கள் என்று வற்புறுத்தி வருகிறார்.
தற்போதைய சூழ்நிலையில் திமுகவும் தவெகவும் ஒதுங்கிவிட்ட நிலையில் பிரேமலதா விஜயகாந்தின் கோரிக்கைக்கு அனேகமாக அதிமுக சம்மதம் தெரிவிக்கலாம் என தெரிகிறது . இருந்தபோதிலும் அனைத்து பேரங்களையும் பேசி முடித்துவிட்டு தான் பிரமலதா விஜயகாந்த் தனது முடிவை சொல்ல இருக்கிறார். எனவே தான் இந்த காலதாமதம் என்பது முக்கிய செய்தி ஆகும்.



