அமெரிக்காவிடம் ஈரான் ஒருபோதும் சரணடையாது என்று அந்நாட்டு உயர் தலைவர் மொஜ்தபா காமேனி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஈரான் உயர் தலைவர் மொஜ்தபா காமேனி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ஈரானை நிபந்தனையின்றிச் சரணடைய அமெரிக்கா கட்டாயப்படுத்த முயல்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே மேலாதிக்க எதிரியிடம் சரணடைவதை ஈரான் பரிசீலித்தாலோ அல்லது அந்தத் திசையில் சிறிதளவு சாய்வைக் காட்டினாலோ, இதுவரை அடைந்த மாபெரும் சாதனைகள் வீணாகிவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாகத் தியாகிகளின் இரத்தமும், ஒட்டுமொத்தத் தேசத்தின் தியாகமும் வீணாகிவிடும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இது ஆணவமிக்க எதிரிக்குப் போர்களையும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் தொடங்கவும் தொடரவும் வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்.
எனவே, இத்தகைய சூழ்நிலையில் ஈரான் ஒருபோதும் சரணடையாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு மீண்டும் நடந்தால் போரின் தாக்கம் விரிவடையும் என்று எச்சரித்துள்ளார்.


