திமுக மாவட்டங்கள் 77-லிருந்து 110-ஆக அதிகரிப்பு: தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு.!

Advertisements

திமுகவில் அமைப்பு முறையாக மாவட்டங்களின் எண்ணிக்கையை 77இல் இருந்து 110ஆக அதிகரித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி அமைப்பு முறையில் இப்போதுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கையை 77இலிருந்து 110ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு அல்லது மூன்று சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. அதிகமான மக்கள் தொகை இருப்பதால் சோழிங்கநல்லூர்த் தொகுதி மட்டும் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 110 மாவட்டங்களில் இப்போதுள்ள மாவட்டச் செயலாளர்கள், நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்ட கிளை அமைப்புகளைப் பிரிப்பதற்கான பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *