பிரபல நடிகர் சசிகுமார் நடிக்கும் ‘டெத் இரயில்வே’ திரைப்படத்தின் டைட்டில் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
பிரபல நடிகர் சசிகுமார் ‘டெத் இரயில்வே’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இரண்டாம் உலகப் போரின் போது இந்தியத் துணைக் கண்டத்தில் நடந்த அறியப்படாத வரலாற்று நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில், சமுத்திரக்கனி, கிஷோர், அசோக் செல்வன், பவானி ஸ்ரீ மற்றும் ஷிவதா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் இசையமைப்பாளர் .
சார்த்தக் கல்யாணி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், இத்திரைத்தின் டைட்டில் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.




