தமிழக கடன் சுமையை குறைக்க முதலமைச்சர் விஜய் வழிகாட்டுதல்படி நடந்து கொண்டிருப்பதாக தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் திருநெல்வேலியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையிலிருந்து விமான மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார்.
இதன் பின்னர் விமான நிலையத்திலிருந்து தூத்துக்குடியில் உள்ள உலக பிரசித்தி பெற்ற பணியமாதா ஆலயத்தில் பிரார்த்தனை மேற்கொண்டார். தொடர்ந்து, அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தமிழக கடன் சுமையை குறைக்க முதலமைச்சர் விஜய் வழிகாட்டுதல்படி நடந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
முதல்வர் கூறியது போல என்றைக்கும் திமுகவிற்கும் தவெகவிற்கும் இடையே தான் போட்டி என்றும் மற்ற கட்சிகள் கனவு உலகத்தில் வாழட்டும் என்றும் கூறினார்.

