Advertisements

தமிழக அரசியலில் பரபரப்பு திருப்பமாக மருத்துவர் அன்புமணி மக்களவை உறுப்பினர் தயாநிதிமாறன் வழக்கறிஞர் கே பாலு ஆகியோர் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டுள்ளனர். இதனிடையே தயாநிதி மாறன் சுற்றுப்பயண நிகழ்ச்சியில் அவருடன் சென்ற கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவரான மருத்துவர் அன்புமணி சமீபத்தில் திமுக அரசு மீது ஒரு குற்றச்சாட்டை வெளிப்படுத்தினார் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் வராத தொழில் முதலீடுகளை வந்ததாக கூறி மோசடி செய்திருக்கிறார்கள். வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதாக பொய்யான தகவல்களை வெளியிடுவது கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திமுக மக்களவை உறுப்பினரான தயாநிதி மாறன் அன்புமணி பற்றி ஒரு கருத்தை தெரிவித்தார் . அவர் பேசும் போது , அன்புமணியை முதலில் அவருடைய அப்பாவை பார்க்கச் சொல்லுங்கள் அப்பாவுக்கு மரியாதை கொடுக்க சொல்லுங்கள், அவருடைய அப்பாவே என்னை கொலை செய்ய பார்க்கிறார் என்று சொல்கிறார் ,அந்த குற்றச்சாட்டு அன்புமணிக்கு அவமானமாக இல்லையா என காரசாரமாக பேசியிருந்தார் ,
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அன்புமணி தரப்பில் இருந்து வழக்கறிஞர் கே பாலு ஒரு பரபரப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் .
அதில் அவர் கூறும் போது மருத்துவர் அன்புமணி கேட்ட கேள்விக்கு தயாநிதிமாறன் சரியான பதில் இருந்தால் சொல்லி இருக்கலாம். இல்லையென்றால், எனக்கு பதில் தெரியாது என்று கூறியிருக்கலாம் அதை விட்டுவிட்டு அன்புமணியை அவரது அப்பாவை பார்த்து கொள்ளுங்கள் என்று சம்பந்தமில்லாமல் பேசியிருக்கிறார் இது அநாகரீகத்தின் உச்சம் ,
தயாநிதி மாறனின் குடும்பத்திலும் அவர் சார்ந்த திமுகவின் குடும்பத்தினரும் கடந்த 20 ஆண்டுகளில் நடந்த மோதல்கள் பற்றி பொதுவெளியில் பேசக்கூட முடியாது, அந்த அளவுக்கு அருவருக்கதக்க நிகழ்வுகள் நடந்திருக்கின்றன அதை பற்றி எல்லாம் பேசினால் புழுக்கள் நெழியும். தனது முகத்தில் இருக்கும் சாக்கடையை துடைக்காமல் எங்கள் தலைவர் மீது தயாநிமாறன் பாய்வது அவரது இயல்பையும் குணத்தையும் காட்டுகிறது ,
அரசியலில் விமர்சனங்கள் செய்வதற்கு சில தகுதிகள் வேண்டும் ஆனால் அவற்றில் ஒன்று கூட தயாநிதிமாறனுக்கு இல்லை . தமிழ்நாட்டில் நாகரீகமான அரசியலை நடத்த வேண்டும் என எங்கள் தலைவர் எங்களுக்கு அறிவித்து இருக்கிறார் . அதைத்தான் நாங்கள் பின்பற்றி வருகிறோம். தயாநிதி மாறனுக்கு அவரது பாணியில் பதிலடி கொடுக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தால் அவரால் தாக்கு பிடிக்க முடியாது.
அத்தகைய சாக்கடை அரசியல் செய்வதற்கு எங்களுக்கு விருப்பமில்லை இதை உணர்ந்து தயாநிதி மாறன், இனியாவது நாவடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என வழக்கறிஞர் பாலு தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் அவரது அறிக்கையில் மதுரையில் தினகரன் பத்திரிக்கை தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தையும் தயாநிதி மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட மோதல்களையும் குறிப்பிட்டு இருக்கிறார் .
இந்த நிலையில் தயாநிதி மாறன் சுற்றுப்பயண நிகழ்ச்சியாக சேலம் சென்று இருந்தார் . அங்கு பூசாரிப்பட்டி பகுதியில் ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சியினர் திரண்டு வந்து உருட்டு கட்டைகளுடன் அவருடன் சென்ற கார்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தினார்கள் . பல கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன . இதனை தொடர்ந்து அவர் தங்கி இருந்த ஹோட்டலுக்கும் பாமகவினர் கைகுளில் உருட்டு கட்டைகளுடன்குவிந்தனர் பதட்டமான இந்த சூழ்நிலையில் காவல்துறையினர் வந்து அனைவரையும் விரட்டி அடித்தனர்.
ஏற்கனவே மருத்தூர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது மருத்துவர் அன்புமணி தரப்பினர் தாக்குதல் நடத்திய சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். தற்பொழுது பூசாரிப்பட்டியில் நடந்த கலவரத்தின் போது பாமகவினரை எதிர்த்து திமுகவினரும் திரண்டு வந்து மோதலில் ஈடுபட்டார்கள் காவல் துறையினரால் இந்த பரபரப்பு சம்பவம் அடக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .
தேர்தல் நெருங்கும் சமயத்தில் இப்பொழுதே அடிதடி மோதல்கள் ஆரம்பித்து விட்டன என்பது பதட்டமான செய்தியாக பார்க்கப்படுகிறது.
Advertisements


