நிர்வாக தோல்வியை மூடி மறைக்க பார்க்கும் தவெக அரசு என நயினார் குற்றச்சாட்டு.!

எத்தனை போலிப் புகார்களைச் சொன்னாலும் தவெகவின் ஆட்சியில் தொடரும் நிர்வாகச் சீர்கேடுகளை மறைக்க முடியாது எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு யூனிட் மின்சாரம் 41 ரூபாய்க்குக் கொள்முதல் செய்ய முயன்றதில் தொடங்கிக் கைதிகள் தப்பியோடல் வரை, தொடர்ந்து தனது துறையில் நடக்கும் தவறுகளைத் தடுக்க வழி தெரியாமல் அமைச்சர் நிர்மல்குமார் திணறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தவெக ஆட்சியைக் கவிழ்க்க அதிமுகவும் பாஜகவும் சதி செய்வதாக அடிப்படையே இல்லாத ஒரு அபாண்டமான பழியை நிர்மல்குமார் சுமத்தியுள்ளது வேடிக்கை எனத் தெரிவித்துள்ளார்.

தவெக எத்தனை போலிப் புகார்களை அடுக்கினாலும், அழுது புலம்பினாலும், நிர்வாகத் திறனின்மையையும் தவெகவின் ஆட்சியினால் தொடரும் நிர்வாகச் சீர்கேடுகளையும் என்றும் மறைக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தவரைப் பார்த்து வீணாகக் குறை சொல்லுமுன், முதலில் குதிரைப் பேரத்தை விடுத்துக் குடிமக்களின் நலனில் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *