Vettaiyan:மாறு வேடத்தில் வந்து வேட்டையன் படம் பார்த்த விஜய்.!

Advertisements

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி உள்ள வேட்டையன் திரைப்படத்தை நடிகர் விஜய் மாறுவேடத்தில் வந்து பார்த்திருப்பதாகத் தகவல் பரவி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. த.செ.ஞானவேல் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக மலையாள திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டார் மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும் பகத் பாசில், ராணா டகுபதி, அமிதாப் பச்சன், ரக்‌ஷன், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே வேட்டையன் திரைப்படத்தில் நடித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.

வேட்டையன் திரைப்படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்துள்ளார் ரஜினிகாந்த். இப்படத்தை லைகா நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து இருந்தது. இப்படம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது. வேட்டையன் படத்தின் முதல் காட்சி தமிழ்நாட்டில் இன்று காலை 9 மணிக்குத் திரையிடப்பட்டது. இதையொட்டி தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள் ஆடிப்பாடி, பட்டாசு வெடித்தும் தியேட்டர் முன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் வேட்டையன் படத்தைப் பார்க்க ஆர்வம் காட்டினர். அதன்படி நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான தனுஷ், இன்று காலை 9 மணிக்கு வேட்டையன் படத்தின் முதல் காட்சியைச் சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் கண்டுகளித்தார். அதேபோல் வேட்டையன் படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தும் தனுஷ் உடன் சேர்ந்து வேட்டையன் படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்தார்.

இதுமட்டுமின்றி தளபதி விஜய்யும் வேட்டையன் படத்தின் முதல் காட்சியைச் சென்னையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் பார்த்து ரசித்ததாகத் தகவல் பரவி வருகிறது. சென்னையில் உள்ள தேவி திரையரங்கில் ரஜினி ரசிகர்களுடன் நடிகர் விஜய் வேட்டையன் படத்தைக் கண்டுகளித்ததாகக் கூறப்படுகிறது. படம் முடிந்ததும் முகத்தை மூடிக்கொண்டு யாருக்கு தெரியாதபடி சீக்ரெட் வழியில் வந்து விஜய் காரில் ஏறிச் செல்லும்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *